Wednesday 29 July 2015

ஐயா அப்துல் கலாம் அவர்களை சந்திக்க விருப்பம் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். பத்தாவது நிமிடத்திலேயே உடனே நேரம் ஒதுக்கி ஒருமணி நேரத்திலேயே புறப்பட்டு வரச்சொல்லி பதில் வந்தது. .குடியரசுத்தலைவர் மாளிகையில்தான் சந்தித்தேன்.எனக்கு ஒதுக்கப்பட்டது பத்து நிமிடங்கள்தான். ஆனால்,சந்திப்பு முடிந்து வெளியில் வரும்போது 52 நிமிடங்கள் இருவரும் பேசியிருந்ததாக ஐயாவின் உதவியாளர் சொன்னார். 
முதல்முறை பதவியேற்று இரண்டுமாத காலம் ஆகியிருந்த வேளை அது . தமிழ் சமூகத்தின் தேவைகள், சிக்கல்கள் ,எதிர்காலம் குறிப்பாக தமிழ் ஈழம்,அணு உலை குறித்த எனது கவலைகளைத் தெரிவித்தேன்.தமிழன் என்கிற முறையில் நான் அவரிடம் எடுத்துக்கொண்ட உரிமைகளை அவர் நன்றாகவே புரிந்து கொண்டு வழி அனுப்பினார்.
மீண்டும் அவரை நான் சந்திக்கவே இல்லை.முயற்சிக்கவும் இல்லை!அன்று நான் அவரிடம் எழுப்பிய கேள்விகளும்,அவரின் பதிலும் நினைவிலிருந்து என்றும் நீங்காதவைகள்.
ராமேஸ்வரத்தில் அவர் பயின்ற தொடக்கப்பள்ளியின் முன்னால் நான்கு சிறுவர்களும்,சிறுமியரும் ஏழ்மை நிலையில் அழுக்கான ஆடைகளுடன் நின்றிருந்த நான் பிடித்தப் படமொன்றையும்,நான் எழுதிய நூல்களையும் கொடுத்தேன். அந்தப்படம் குறித்து நான் சொன்னதைக்கேட்டு அவர் இமைகொட்டாமல் அதையே பார்த்திருந்ததையும் அவரது உணர்ச்சிகளையும் இப்பொழுது நினைத்துப்பார்க்கிறேன்.
உயர்ந்த மனிதரின் எளிமையும்,பண்பும் என்றும் என்னிலிருந்து அகலாதவைகள்.

No comments:

Post a Comment