நேற்று பண்ணுருட்டி-காடாம்புலியூரில் மிகச்சிறப்பாக நடைபெற்ற "பலா" - மதிப்புக்கூட்டு விழிப்புணர்வு இயக்க பயிற்சி பட்டறையில் பலா உற்பத்தி விவசாயிகளுடனான எனது பங்கேற்பு.
விவசாய சாகுபடிக்கு புதிய பலா ரகங்களை அளித்து ஊக்குவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு இயக்குநர் தங்கர்பச்சான் கோரிக்கை.
புதிய பலா ரகங்களை பண்ருட்டி விவசாயிகளுக்கு அளித்து அதன் சாகுபடியை ஊக்கவிக்க வேண்டும் என திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பலாப்பழத்துக்கு பெயர் பெற்ற நகரமான பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத தால், விளைவித்த உடன் விற்பதை மட்டுமே செய்து வருகின்றனர். இதனால் பலா விவசாயிகள் தொடர்ந்து ஏழ்மை நிலையிலேயே உள்ளனர்.
2 நாள் கருத்தரங்கு
இந்நிலையில் பலாப்பழத்துக்கு மதிப்புக் கூட்டினால் எந்தெந்த வகையில் விவசாயிகள் பயன்பெ றுவார்கள் என்பதை ஆராய்ந்த பண்ருட்டி நகராட்சி முன்னாள் தலைவர் பஞ்சவர்ணம், நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா ராஜேந் திரன் ஆகியோர், பலாப்பழத்தி லிருந்து உற்பத்தி செய்யக்கூடிய உணவுப் பொருட்களையும் அதை சந்தைப்படுத்தும் முறை குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 2 நாள் கருத்தரங்கை நடத்தினர். இந்த கருத்தரங்கில் பண்ருட்டி பலா விவசாயிகள் மற்றும் வங்கி அதி காரிகளை அழைத்து பலா உப உணவுப் பொருட்கள் குறித்து விளக்கம் அளித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப் பட இயக்குநர் தங்கர்பச்சான் கலந்துகொண்டார்.
இதுதொடர்பாக பண்ருட்டி பஞ்சவர்ணம் கூறும்போது, ‘பலாப் பழத்தின் பன்முகத் தன்மையை விவசாயிகள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்தக் கருத்தரங்கின் நோக்கம்’ என்றார்.
இதுதொடர்பாக சபா.ரா ஜேந் திரன் எம்எல்ஏ கூறும்போ து, ‘தற்போது பலாவை மூலப் பொரு ளாகக் கொண்ட உணவு வகை கள் தயாரித்துள்ளோம். அடுத்தகட்ட மாக இப்பகுதி சமையல் கலை ஞர்களிடம் சமையல் பட்டியல் தயாரிக்கும்போது பலாப்பழ உணவு வகைகளான பலாப்பழ பாயாசம், கேக், அல்வா, பக்கோடா, கட்லெட், ஐஸ் கிரீம் உள்ளிட்டவற்றையும் இணைக்க கேட்டுக்கொண்டு இருக்கிறோம். மேலும் அதன் மருத்துவ குணங் களையும் எடுத் துரைத்தோம்” என்றார்.
மானியத்துடன் கடன் உதவி
திரைப்பட இயக்குநரும், எழுத் தாளருமான தங்கர்பச்சான் கூறும் போது, “ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காய்க்கக்கூடியதாக பலா உள்ளது. தற்போது புதிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 2 முறை காய்க்கும் ரகங்களும் அறிமுகமாகி உள்ளன. எனவே அரசு அத்தகைய புதிய ரகங்களை பண்ருட்டி விவசாயி களுக்கு அளித்து அதன் சாகுபடியை ஊக்கவிக்க வேண்டும்.
மேலும் பலா உப உணவுப் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளை ஏற்படுத்து வதோடு, மாவட்ட தொழில் மையம் மூலம் பலா தொழில்முனை வோருக்கான பயிற்சி அளித்து தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க வேண்டும்” என்றார்.
No comments:
Post a Comment